ஒன்று சேருவோம், மாற்றம் காண்போம்! சிகரங்களை அடைய, சீரிய வழி செல்வோம்!
ஒன்பதாண்டு காலம் (1985-1994) அரசு பொதுப் பணித்துறையில் பொறியாளராகப் பணியாற்றியவர். பின் ‘பரணி பில்டர்ஸ்’ எனும் நிறுவனத்தை தொடங்கி கட்டுமானப்..
திரு.சிவகுமார். தமிழ்த் திரையுலக மார்க்கண்டேயன்; 1965-இல் இருந்து 192 திரைப் படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர்.சென்னை கவின்கலைக் கல்லூரியில் முறையாகப் பயின்ற..
‘சக்தி மசாலா’ நிர்வாக இயக்குநர் டாக்டர்.பி.சி.துரைசாமி. உணவுப் பொருட்கள் தயாரிப்புத் தொழிலில் 38 ஆண்டுகள் அனுபவம் பெற்ற சக்திமசாலா குழும நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர்..
சென்னை போன்ற மாநகரங்களின் மாணவர்களுக்குக் கிடைப்பதைப் போலவே தமிழ்நாட்டின் தொலைதூர கிராமங்களிலுள்ள மாணவர்களுக்கும் உயர்கல்வி பெறுவதற்குரிய வாய்ப்புகளை உருவாக்கித் தருவது, கிராமப்புறங்களில், பொருளாதார ரீதியாகவும்-சமூக ரீதியாகவும் பின்தங்கியுள்ள இளைஞர்கள்-இளம்பெண்களில் ஆர்வமும், உத்வேகமும் நிரம்பிய, ஆனால் வாய்ப்புகள் கிடைக்கப் பெறாத இளம் ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் இலட்சிய மாணவர்களைக் கண்டறிவது: அவர்களுக்கு உறைவிடம், உணவு வழங்கி இலவசமாக ஆட்சிப்பணித் தேர்வுகளை எழுதுவதற்குப் பயிற்சியளிப்பது.
ஒரு தலைசிறந்த, புகழ்வாய்ந்த அறக்கட்டளையாக சிகரம் ஐஏஎஸ் பயிற்சி மையத்தை வளர்த்தெடுப்பது. கிராமப்புற மாணவர்களின் மத்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பெறுகிற சூட்டிகையான ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் இலட்சியவாதிகளுக்கு, அவர்களின் கனவுகள் நனவாவதற்குத் தேவையான வழிகாட்டுதலையும், உதவிகளையும் வழங்குவது.
தேர்வு செய்யப்படுகிற இம்மாணவர்களின் சமூக, பொருளதாரப் பின்னணிகள் எவையாயினும், அவர்களுடைய கனவுகள் நனவாகும் என்கிற நம்பிக்கையையும் அவர்கட்கு வழங்குவது. பயிற்றுவிக்கப்படுகிற மாணவர்கள் ஒழுக்கமும், நற்சிந்தனைகளும், நாட்டுப்பற்றும் உடையவர்களாக ஆவதற்கு உரிய வழிகாட்டுவது.
இந்த இலக்குகளை அடைவதற்கு தென்னிந்தியாவின்/ தமிழ்நாட்டின் முதல்தரமான ஐ.ஏ.எஸ். தேர்வுப் பயிற்சி நிறுவனமான சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியுடன் ஒத்துழைத்தும், ஒருங்கிணைந்தும் பணியாற்றுவது.