திரு. சிவகுமார்

தலைவர்

  • தமிழ்த் திரையுலக மார்க்கண்டேயன்; 1965-இல் இருந்து 192 திரைப் படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். சென்னை கவின்கலைக் கல்லூரியில் முறையாகப் பயின்ற ஓவியக் கலைஞர்; எழுத்தாளர், பேச்சாளர். தனது அறக்கட்டளை மூலம் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்து வருகிறவர்.
  • தலைவர்சிவகுமார்-திரைப்பட நடிகர், ஓவியர், எழுத்தாளர், பேச்சாளர்
    பிறந்த தேதி27.10.1941
    தந்தையார் ராக்கையா கவுண்டர். (10 மாதக் குழந்தையாய் இருந்த போதே தந்தை இறந்து விட்டார்.)
    தாயார்பழனியம்மாள்
    துணைவியார்திருமதி லஷ்மி
    மகள் திருமதி பிருந்தா
    மகன்கள்திரு.சூர்யா, திரு.கார்த்தி
    கல்வித் தகுதி கோயம்புத்தூர், சூலூரில் அப்போதைய போர்டு உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி; சென்னை அரசு கலை, கைவினைக் கல்லூரியில் ஆறு ஆண்டுப் படிப்புக்குப் பின் ஓவியக் கலையில் டிப்ளமோ பெற்றிருக்கிறார்.
    பிறந்த ஊர் காசிகவுண்டர் புதூர் – கோவை மாவட்டம், சூலூர் அருகேயுள்ள ஒரு சிறிய குக்கிராமம். சிவகுமார் பிறந்த போது, அவ்வூரில் பள்ளி, மின்சாரம், குடிநீர் அல்லது கழிவறை வசதி – இவை எதுவுமே இல்லை.
  • கலையியல் மாணவர் என்ற வகையில், இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஓவியங்கள் தீட்டியவர். அஜந்தா, எல்லோரா, எலிபண்டா குகைகள், டெல்லி குதுப்மினார், பம்பாய், திருப்பதி, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, செஞ்சிக் கோட்டை, கன்னியாகுமரி – உட்பட பல வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களை நேரில் கண்டு அங்கங்கேயே தங்கி கோயில்களையும், இயற்கை எழில் மிகுந்த நிலவெளிக் காட்சிகளையும் அற்புத ஓவியங்களாய்த் தீட்டியவர்.
  • திரைப்பட உலகில் நுழைந்தது:1965 – ஆம் ஆண்டு மொத்தம் 192 திரைப்படங்களில் நடித்தவர்: அவற்றுள் கதாநாயகராகப் பாத்திரமேற்றவை:170.
  • பெற்ற விருதுகள்: தமிழ்நாடு அரசு 'சிறந்த நடிகர்' விருது இரண்டுமுறை; வாழ்நாள் சாதனையாளர் விருது. ஃபிலிம் ஃபேர் – சிறந்த நடிகர் விருது – இரண்டுமுறை. ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது.
  • சிவகுமார் கதாநாயகராக நடித்த 'மறுபக்கம்', அகில இந்திய அளவில் சிறந்த படத்திற்கான தங்கத்தாமரை விருது பெற்றது.
  • இவர் எழுதிய நூல்கள்: 'இது ராஜபாட்டை அல்ல.' – சிவகுமாரின் 50 ஆண்டுகால தமிழ்த் திரையுலக அனுபங்களின் வரலாறு.
  • சிவகுமார் டயரி-1946-1975 – தனது டயரியில் அன்றாடம் இவர் பதிவு செய்திருக்கும் ஞாபகங்களின் தொகுப்பு இவரது ஆரம்ப கால வாழ்வையும், ஓவியராயிருந்து நடிகரானது வரையிலான வாழ்க்கைப் பயணத்தையும் விவரிக்கிறது.
  • பேச்சுக்கலைச் சாதனைகள்

  • 'கம்பன் என் காதலன்' – கம்பனின் விருத்தப் பாக்களை, அவற்றுள் மிகச்சிறந்த நூறு பாடல்களைத் துளியும் பிறழாமல், ஏற்ற இறக்கங்களுடன் சொல்லியவாறே விளக்கங்களைப் பேச்சுத் தமிழில் அற்புதமான உணர்ச்சி பாவங்களுடன் விளக்கும் உரை வீச்சு. இராமனின் கதை முழுவதையும், தனக்கு முன் ஒரு துண்டுக் காகிதக் குறிப்பைக் கூட வைத்துக் கொள்ளாமல் நினைவிலிருந்து சொல்லிய பாங்கு சாதாரணச் சாதனையல்ல. இதை அவர் நிகழ்த்திய நாள்வரை கம்பராமாயண விரிவுரை வித்தகர்களோ, ஆன்மீகச் சொற்பொழிவாளர்களோ கூட இராமாயணக் கதை முழுவதையும் ஒரே நாளில் சொன்னதில்லை. இவரோ, ஒரு நாள் – அரை நாளில் அல்ல, வெறும் இரண்டரை மணி நேரத்தில் இந்த உரையை நிகழ்த்தி முடித்ததன் மூலம் ஓர் உலக சாதனையை நிகழ்த்தியவர்.
  • தொடர்ந்து எட்டு பேருரைகளை பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்கள் முன் நிகழ்த்தி, அவை அனைத்தும் ராஜ் TV மூலம் 'ப்ரைம் டைம்' ஒளிபரப்பாகின:
  • பெண்
  • என் கண்ணின் மணிகளுக்கு
  • என்னைச் செதுக்கியவர்கள்
  • நேருக்கு நேர்
  • தவப் புதல்வர்கள்
  • என் செல்லக் குழந்தைகளுக்கு
  • அறன் செய்ய விரும்பு
  • வாழ்க்கை ஒரு வானவில்
  • யோகக் கலை அனுசரிப்பவர். / எவ்விதத் தீய பழக்கங்களும் இல்லாதவர்.
  • சூர்யாவும், கார்த்தியும் இன்று திரையுலகில் புகழ் பெற்றவர்கள். சூர்யா தன் 'அகரம்' ஃபவுண்டேஷன் மூலம் மிகப் பின் தங்கிய, ஆதரவற்ற மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்விப் படிப்புகளுக்கு உதவி செய்து வருகிறார்.