Exam Details

Sigaram IAS Coaching Institute has embarked on an ambitious journey to Provide High Standards UPSC Civil Service Coaching Free for Under Privileged & Rural Candidates

  • பயிற்சி பெற விரும்புகிற மாணவர்கள், இதற்கென இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
  • குறைந்த பட்ச கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை, முதுகலை, பொறியியல், மருத்துவப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பில் இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு சென்னையில் நேர்முக தேர்வு நடைபெறும், நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு குடிமைப்பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சங்கர் IAS அகாடெமியில் வழங்கப்படும்.
  • நுழைவுத் தேர்வின் வடிவமைப்பு - மொத்த மதிப்பெண்: 500

  • திறனறிவுத் தேர்வு (240 மதிப்பெண்கள்)

    பொது அறிவு வினாக்கள் (60 x 2 = 120 மதிப்பெண்கள்) குடிமைப்பணி அணுகு திறன் வினாக்கள் 60 x 2 = 120 மதிப்பெண்கள்.
  • கட்டுரை எழுதுதல் (100 மதிப்பெண்கள்)

    நான்கு தலைப்புகள் வழங்கப் பெறும்; தேர்வாளர்கள் ஏதேனும் ஒரு தலைப்பைத் தேர்வு செய்து கொள்ளலாம். மொத்தம் 1500 வார்த்தைகட்கு மிகாமல் அத்தலைப்பைப் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும். மொழி: ஆங்கிலம், 100 மதிப்பெண்கள், நேரம்: 1 மணி.
  • நேர்முகத் தேர்வு (160 மதிப்பெண்கள்)

    பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்ட வகுப்புகளுக்கு 100 மதிப்பெண்களும் மற்றும் நேர்காணலுக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

திறனறி தேர்வுக்கான பாடங்கள் (GS & CSAT)

பொது அறிவு பாடத்திட்டம் (General Studies)

  • இந்திய வரலாறு-தொன்மை,மத்திய, நவீன காலம் - Indian History - Ancient, Medieval and Modern.
  • புவியியல் - புவியியலின் அடிப்படை அம்சங்கள் - Geography - Fundamentals of Geography.
  • இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் - Indian Polity and Constitution.
  • பொருளாதாரம் - Economy.
  • நடப்பு நிகழ்வுகள் - Current Events.
  • சுற்றுச்சூழல் - Environment.
  • அறிவியலும் தொழில்நுட்பமும் - Science & Technology.

குடிமைப்பணி பாடத்திட்டம் (CSAT)

  • அறிவு கூர்மைத் திறன் - Aptitude.
  • தீர்க்க ரீதியாக காரணம் காட்டுதல் - Logical Reasoning.
  • பகுத்தாராயும் திறன் - Analytical Ability.
  • முடிவுகள் எடுத்தல்,பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் -  Decision Making and Problem Solving.
  • பொதுவான மனச் செயற்பாட்டுத் திறன் -  General Mental Ability
  • அடிப்படை எண்ணியல், புள்ளி விவரத் தரவுகளின் மறு விளக்கம் - Basic Numeracy and Data Interpretation.
  • வாசிக்கும் திறன்-Reading Comprehension.